புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச்சென்றுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அரசியல் கைதி வைத்தியசாலையில் இருந்து
நேற்று  தப்பிச்சென்றுள்ளார்.
தென்மராட்சியை சேர்ந்த இராசையா ஆனந்தராஜா (37 வயது) என்பவரே யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
குறித்த நபர் கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 31ஆம் திகதி கைது செய்யப்பட்டு பின்னர் 2012ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் மீண்டும் 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் திகதி கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில்  சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் கடந்த ஜீன் 5ஆம் திகதி தனது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தடுப்பூசியொன்று ஏற்றப்பட்டிருந்ததாகவும் இதனால் இவருக்கு உடல் உள பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக  தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
அதனையடுத்து குறித்த கைதியை அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு  மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்ளிவு  அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பணிப்புரை விடுத்திருந்தார்.
அந்தவகையில்  கடந்த 14.08.2016 சனிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக;காக  சிறைச்சாலை அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட குறித்த கைதிக்கு சிறைச்சாலை அதிகாரிகளால் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையிலேயே  நேற்று முன்தினம் இரவு பத்துமணியளவில் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
தப்பிச் சென்ற குறித்த கைதியை கைது செய்வதற்கhன நடவடிக்கைகளை  பொலிஸாருடன் சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad