புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2016

காணாமற்போனவர்களுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்து

காணாமற்  போனவர்களின் குடும்பத்தினர் எதிர்நோக்கும் சட்டப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகை யில், காணாமற்போனவர்களுக்கான சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு காணாமற்போனவர்களின் குடும்பங்களிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இறப்புக்களின் பதிவு சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பி ட்டு ள்ளார்.

சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், காணாமற் போனமைக்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என காணாமற் போனோரின் உறவினர்கள் மத்தியில் பொய்யான பிரசாரம் முன்னெடுக்க ப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த சான்றிதழானது காணாமற் போயுள்ளார் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளும் பத்திரமாகவே அமையும். அதாவது, குறித்த நபர் மரணிக்கவில்லை. காணாமற் போயுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியே இச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த சான்றிதழை வழங்குவதுடன் காணாமற் போனோர் தொடர்பான விசாரணைகள் நிறைவடைய மாட்டாது. காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசு விசாரணை செய்து தீர்மானம் வழங்கும்.

அதேவேளை, கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் காணாமற் போனவர்களின் உறவினர்கள் மரணச் சான்றிதழை பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தமையையும் அவர் சபையில்  சுட்டி க்காட்டினார்.

ad

ad