20 செப்., 2016

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிர் மேற்பார்வைக் குழு கூட்டம் கடந்த 12ஆம் தேதி கூடியபோது கூடுதல் புள்ளி விவரங்களை தர வேண்டும் என்று தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு மத்திய அரசின் நீர்வள செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது. ஆனால் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசுகளுக்கும் இது ஏற்புடையதாக இல்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழகமும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகமும் மனுத் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

உச்சநீதிமன்ற உத்தரவுபடி காவிர் மேற்பார்வைக் குழு கூட்டம் கடந்த 12ஆம் தேதி கூடியபோது கூடுதல் புள்ளி விவரங்களை தர வேண்டும் என்று தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு மத்திய அரசின் நீர்வள செயலாளர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின்போது 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது. ஆனால் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசுகளுக்கும் இது ஏற்புடையதாக இல்லை. 

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழகமும், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகமும் மனுத் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.