20 செப்., 2016

சுவாதி, ராம்குமாரை நான் கொலை செய்தேனா !! கருப்பு முருகானந்தம்

சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு தரப்பினரால் குற்றம் சாட்டப்பட்டு வந்த தமிழக பாஜக பிரமுகரான கருப்பு முருகானந்தம்,
ராம்குமார் மற்றும் சுவாதி மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
ராம்குமார் மற்றும் சுவாதி மரணம் தனியார் தமிழ் பத்திரிக்கை ஒன்றிற்கு கருப்பு முருகானந்தம் அளித்த பேட்டியில் “சுவாதி யார் என்பதே எனக்கு தெரியாது, அவரது தந்தை யார், அவர் விஷ்வ ஹிந்து பரிஷத உறுப்பினரா என்பது கூட எனக்கு  தெரியாது, ஆனால் திலீபன் மகேந்திரன், தமிழச்சி உள்பட சிலர் என்னை குறிவைத்தே சிலர் கருத்து தெரிவித்து வருவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ராம்குமாரின் மரணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கருப்பு முருகானந்தம், ராம்குமாரையும் நான் தான் கொலை செய்தேன் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். ஜெயிலுக்குள்ளேயே ஆள் வைத்து கொலை செய்யும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை, அது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வால் கூட முடியாது” என்று கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.