புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2016

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்டதால் பி.பி.சி செய்தியாளர் பணிநீக்கம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தியாளருக்கு
ரூ.97 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பிரித்தானிய நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
பிரித்தானிய நாட்டை சேர்ந்த பி.பி.சி என்ற தனியார் செய்தி நிறுவனத்தில் சந்தனகீர்த்தி பண்டாரா(57) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு யூலை 22-ம் திகதி இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தம்பதிக்கு குட்டி இளவரசர் ஜோர்ஜ் பிறந்துள்ளார்.
இந்த செய்தியை மறுநாளான 23-ம் திகதி சிறப்பு செய்தியாக வெளியிட பி.பி.சி தீர்மானித்துள்ளது.
அப்போது, செய்தியை வெளியிடும் பொறுப்பை சந்தனகீர்த்தி பண்டாரா பார்த்து வந்துள்ளார். இளவரசி ஜோர்ஜ் பிறந்த செய்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சந்தனகீர்த்திக்கு தகவல் அளிக்கப்பட்டது.
ஆனால், செய்தி வெளியிட வேண்டிய அதே யூலை 23-ம் திகதி இலங்கையில் ’கருப்பு யூலை’ அனுசரிக்கப்பட்டது. அதாவது, கடந்த 1983ம் ஆண்டு யூலை 23-ம் திகதி தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
எனவே, இலங்கை தமிழர்களின் செய்திக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் என்றும், அதே நாளில் குட்டி இளவரசர் ஜோர்ஜ் பிறந்த செய்தி ‘சிறப்பு செய்தியில்’ வராது எனவும் சந்தனகீர்த்தி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
செய்தியாளார் கூறியது போலவே மறுநாள் இலங்கை தமிழர்களின் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பி.பி.சி நிறுவனம் சந்தனகீர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. மேலும், இதுபோன்ற தவறு மீண்டும் நிகழாமல் இருக்க அவரிடம் உறுதி பத்திரமும் எழுதி வாங்கப்பட்டது.
ஆனால், இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடத்திற்கு பின்னர், அதாதவது, கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சந்தனகீர்த்தியை பி.பி.சி நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது.
பி.பி.சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தனி மனித உரிமையை பறிப்பதாக இருப்பதாக கூறி சந்தனகீர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது, 18 ஆண்டுகளாக பி.பி.சி நிறுனத்தில் பணியாற்றிய செய்தியாளர் மீது தனிப்பட்ட விரோதம் காரணமாக பி.பி.சி நிறுனம் நடவடிக்கை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
எனவே, செய்தியாளரின் உரிமையை பறிக்கும் விதத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது தவறு எனக் கூறிய நீதிபதிகள், சந்தனகீர்த்திக்கு 51,428 பவுண்ட்(97,63,855 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என பி.பி.சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.

ad

ad