புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2016

நாயை மாடியில் இருந்து தூக்கி வீசிய மருத்துவ மாணவர்களுக்கு தலா 2 லட்சம் அபராதம்




சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு குன்றத்தூரில் 3-வது மாடியில் இருந்து நாய் குட்டியை எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் கவுதம் சுதர்சன், ஆசிஸ்பால் இருவரும் கீழே தூக்கி வீசும் வீடியோ காட்சியும் அதை படம் பிடித்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால் மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவர்கள் நாய்க்கான சிகிச்சை செலவு மற்றும் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் மாணவர்களுக்கான அபராத தொகையை முடிவு செய்யும் பொருப்பு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்லைக்கழகம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் 4 பேர் அடங்கிய குழு அமைத்தது. இரு மாணவர்களுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க அந்த குழு தீர்மானித்துள்ளது. விலங்குகள் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளில் விதிகப்பட்ட அபராதங்களில் இதுவே அதிகபட்ச அபராதம் என்று கூறிப்பிடப்படுகிறது.

ad

ad