புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2016

யாழிலிருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கபிஸ்கட்டுகள் பிடிபட்டன

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து இந்தியாவுக்குக் கடல் மார்க்கமாகக் கடத்திச் செல்லப்பட்டதாகக் கருதப்படும் ஐந்தரை கிலோ
நிறையுடைய தங்க பிஸ்கட்டுகளை காங்கேச ன்துறை கடற்படையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.
சிறிய ரக படகொன்றில் இந்தக் கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்த யாழ்ப்பா ணத்தைச் சேர்ந்த இருவரைக் கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்கள் பயணம் செய்த படகையும் கைப்பற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொன்றும் நூறு கிராம் எடையுள்ள 55 தங்க பிஸ்கட்டுகள் என்று கடற்படையினருக்குக் கிடைத்த ரகசிய தகவல் ஒன்றையடுத்து 30-ஆம்தேதி காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.

ad

ad