புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2016

ஐ.நா செயலரின் யாழ். விஜயத்தின்போது கவனயீர்ப்பு போராட்டம்

யாழ். மாவட்டத்திற்கு நாளை விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனினுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடு தலை, காணி பறிப்புக்கள், மீள்குடியேற்றம் போன்றவற்றிற்கான தீர்வைக் கோரி, யாழ். மாவட்ட செயலகம் முன்பாக நாளை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடு க்கப்படவுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், இந்த கவனயீர்ப்பு போரா ட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில், இன்று வியாழக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

காணாமல் போனவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட எம்.கே. சிவாஜிலிங்கம்,

போருக்கு பின்னரான கடந்த 7 வருடங்களில் பெருமளவிலான மக்கள் அவர்க ளுடைய சொந்த நிலங்களில் மீள்குடியேற்றப்படாத நிலையில், நலன்புரி நிலை யங்களிலும், மாற்று காணிகளிலும் வாழ்ந்து கொண்டிருப்பதையும் சுட்டிக்கா ட்டி னார்.

இதேபோன்று, தமிழ் மக்களுக்கு சொந்தமான பெருமளவு நிலத்தை படையி னரின் தேவைக்கென அடையாளப்படுத்தி, காணி சுவீகரிப்பு என்ற பெயரால் அபகரிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைவிட தமிழர்களுடைய, கடல்வளம், விவசாயம் போன்றன சுரண்டப்ப டுவதுடன், தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான அரசியல் தீர்வு தொட ர்ந்தும் கிடைக்காமலேயே இருப்பதாகவும் எம்.கே. சிவாஜிலிங்கம் சுட்டிக்கா ட்டினார்.

இந்த நிலையில் அரசாங்கம் தமிழ் மக்களுடைய இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும், எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் என்ற நம்பி க்கை தமிழ் மக்களுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு மீதமாக இருக்கும் ஒரே நம்பிக்கை சர்வதேசம் மற்றும், ஐ.நா மட்டுமே எனக் குறிப்பிட்ட அவர்,

ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் யாழ். குடாநாட்டிற்கு வருகை தரும் நிலையில், அவருடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த போரட்டம் நடை பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், அரசியல் கைதி களின் உறவினர்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்கள், காணிகள் பறிக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மக்கள், திட்டமிட்ட குடியேற்றங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் என அனைவரும் கலந்துகொண்டு தமிழ் மக்களின் அழுகைகளை, இந்த நல்லாட்சி அரசாங்கத்தினாலும் நிறுத்த முடியாது என்பதை காட்டவேண்டும் என்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த கவனயீர்ப்புபோராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்  எனக் குறிப்பிட்ட அவர், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்

ad

ad