புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2016

அழுத்தம் தரார் ஐ.நா. செயலர்-அரசு நம்பிக்கை

தற்போதைய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச சமூகத்திற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், போர் குற்ற விசாரணைகள் தொடர்பில் சர்வதேசத்தின் தலையீடு இருக்க வேண்டும் என்ற அழுத்தம் முற்றிலும் நீங்கியுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதனால் இன்றைய தினம் இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்கப்போவதில்லை என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள  அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, உள்ளக விசாரணைப் பொறிமுறை ஊடாக நீதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இந்தத் தகவல்களை முன்வைத்துள்ளார்.

“ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு  விஜயம் மேற்கொண்டார். அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்தவுடன் இணைந்து கூட்டு உடன்படிக்கையொன்றையும் வெளியிட்டார். அதிலுள்ள பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றி ஆராய அவர் வரவில்லை. நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றங்களை ஆராயும் நோக்கிலேயே அவரது பயணம் அமைந்துள்ளது.

ஐ.நா. செயலாளருடன் இணைந்து மஹிந்த வெளியிட்ட அறிக்கையின் பிரகாரமே தாருஸ்மன் குழு அமைக்கப்பட்டது. ஆகவே, எது பாரதூரம் என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ள முடியும். முன்னைய ஆட்சியில் நீதித்துறைக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஆனால், இன்று அந்தநிலை மாறியுள்ளது. எனவே, இலங்கையின் நீதித்துறை, அதன் கட்டமைப்புமீது சர்வதேச சமூகமும்,ஐ.நாவும் நம்பிக்கை வைத்துள்ளன.

அண்மையில், ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், பொறுப்புகூறல் பொறிமுறைக்கு சர்வதேசத்தின் பங்களிப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு ஐ.நா. செயலாளர் பதலளிக்கவில்லை. எனவே, பொறுப்புக்கூறல் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் எதுவும் கிடையாது. உள்ளக நீதிக்கட்டமைப்பை ஐ.நா. செயலாளரும் நம்புகிறார். நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அவர்களுக்கு நாட்டின் நீதித்துறை மீது  நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அன்று அவ்வாறான நிலை காணப்படவில்லை. வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றல் அவசியம் என்ற அச்சுறுத்தல் அன்று காணப்பட்டது. எனினும் தற்போது அது தொடர்பில் யாரும் அழுத்தம் கொடுப்பதில்லை. அது தொடர்பில் கோரிக்கை விடுத்த பலர் இன்று அமைதியாகவுள்ளனர். காரணம் அந்த செயற்பாடுகள் சுதந்திரமாக முன்னெடுக்கப்படுகின்றது என்ற நம்பிக்கை அவர்களுக்கு காணப்படுகின்றது.“என்றார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த இராணுவப் பேச்சாளரிடம், ஐ.நா செயலாளர் நாயகம் பேன் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தினால் இராணுவத்திற்கு அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகள் ஏற்படலாமா என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த இராணுவப் பேச்சாளரான மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவ்வாறு எந்த நெருக்கடிகளும் ஏற்படப் போவதில்லை என்று கூறியதுடன், தமிழ் மக்கள் இராணுவத்திற்கு எதிராக எந்தவித முறைப்பாடுகளையும் முன்வைக்கப்போவதில்லை என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர “தமிழ் மக்கள் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இருக்கின்றது. அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் பான் கீ மூனுக்கு தெளிவுபடுத்துவார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை அவர்கள் முன்வைப்பார்கள் என நாம் நம்பவில்லை

ad

ad