புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2016

காதலிக்க மறுத்ததால் வாலிபர் வெறிச்செயல் - கிருஸ்துவ ஆலயத்தில் ஆசிரியை வெட்டிக்கொலை


தூத்துக்குடி கீழசண்முகபுரம் இந்திராநகரை சேர்ந்தவர் நியுமென் மகள் பிரான்சினா (வயது 24). இவர் அதே பகுதியில் தூயபேதுரு மழலையர் ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். 

வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு பிரான்சினா நடந்து செல்வது வழக்கம்.  அதே பகுதியை சேர்ந்த வாலிபர் சீகன் என்பவர் பிரான்சினாவை ஒரு தலையாக காதலித்துள்ளார். இதனால் தினமும் பள்ளிக்கு செல்லும் பிரான்சினாவை அவர் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் உள்ள ஆலயத்தில் தினமும் பிரார்த்தனை செய்த பின்னர் பிரான்சினா பள்ளிக்கு செல்வார். அதுவரை சீகன் ஆலயத்தின் வெளியே காத்திருப்பாராம்.

இந்நிலையில் ஆசிரியை பிரான்சினாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். சமீபத்தில் அவரது திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அவருக்கு வருகிற 8-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதனால் ஆசிரியை வேலையை விட்டுவிட பிரான்சினா முடிவு செய்தார். இதையடுத்து இன்றுடன் ஆசிரியை வேலையில் இருந்து நின்றுவிடப் போவதாக அவர் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

பிரான்சினாவிற்கு வருகிற 8-ந் தேதி திருணம் நடக்க இருப்பதையும், அவர் வேலையில் இருந்து நிற்கப்போவதையும் அறிந்த சீகன், தனக்கு கிடைக்காத அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதையடுத்து இன்று காலை அரிவாளை தனது சட்டைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு பள்ளி அருகே சீகன் காத்திருந்தார்.

வழக்கம் போல் பள்ளிக்கு வந்த பிரான்சினா பள்ளி வளாகத்தில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்போது உள்ளே புகுந்த சீகன்,  தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். இதில் பிரான்சினாவின் தலை, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது. அவர் அலறி துடித்தபடி கீழே விழுந்தார். உடனே சீகன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

பிரான்சினாவின் அலறல் சத்தம் கேட்டு பள்ளியில் இருந்த மற்ற ஆசிரியர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரான்சினாவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரான்சினா சிகிச்சை பெற்று வந்தார்.  அங்கு அவர் சிகிச்சைபலனின்றி உயிர் இழந்தார்.

ad

ad