புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 செப்., 2016

யாழில்உயர்பாதுகாப்பு வலயங்களிலுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படா-இராணுவம் திட்டவட்டம்

யாழ்ப்பாணத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள பொது மக்களின் காணிகளை விடு விக்கும் போது தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என  இராணுவம் அறிவித்துள்ளது.

இதனால் இராணுவ முகாம்களுக்குத் தேவையான காணிகள் தொடர்ந்தும் வைத்துக்கொண்டு ஏனைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக  இராணுவபேச்சாளர் மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“இராணுவ முகாம்கள் சில காரணங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்கு தேவையான இடத்தின் அளவு குறித்த வரையறை காணப்படுகின்றது. ஆகவே இராணுவ முகாமிற்கு தேவையற்ற மேலதிகமான அனைத்து காணிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்பட்டுள்ளன.

எனினும் எந்தெந்த இடங்கள் விடுவிக்கப்படுமென எங்களால் கூற முடியாது. காரணம் பொதுமக்களின் வேண்டுகோளை கருத்திற்கொண்டு அது தொடர்பில் ஆராய்ந்து. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படாத காணிகளை விடுவிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  நீங்கள் குறிப்பிடும் காணி தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான படையணியின் அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டும்.

தற்போது காணப்படும் சமாதான சூழலையும் கருத்திற் கொண்டு, புலனாய்வாளர்களின் அறிக்கைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் தென்பகுதியிலும் இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன. வடக்கிலும் இராணுவ முகாம்கள் காணப்படுகின்றன. பாதுகாப்பு தேவை கருதி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவறதற்காகவே அவைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காணிகளை விடுப்பது தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே எந்தெந்த காணிகளை விடுவிப்பது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை. ஆகவே தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் அதனை உறுதிப்படுத்திக்கொண்டு. காணிகளை விடுவிப்பது தொடர்பில் அவதானம்  செலுத்தியுள்ளோம்.“என்றார்

ad

ad