23 பிப்., 2017

அதிமுக துணைப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார் டி.டி.வி.தினகரன்!

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன
. இதையடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தார்.
இந்நிலையில், தினகரன் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தினகரன், சசிகலா உள்ளிட்டோரை கடந்த 2011-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியை விட்டு நீக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.