23 பிப்., 2017

அமைச்சரவையில் மாற்றம் - நிதித்துறை அமைச்சரானார் ஜெயக்குமார்!


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையில் முதல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.  அவர் வகித்து வந்த இலாகாக்கள் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன.   மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு கூடுதல் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  நிதி, திட்டம், ஊழியர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை  ஆகிய இலாகாக்கள் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

முதல்வர் பழனிச்சாமியின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.