புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2017

விமல் வீரவன்ச வீட்டில் மர்மமான முறையில் உயிரிழிந்த இளைஞனின் மரணம்வீரவன்சவின் மகன் சாட்சி

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வீட்டில் மர்மமான முறையில் உயிரிழிந்த இளைஞனின்
மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதன்போது வீரவன்சவின் மகன் நீதிமன்றில் சாட்சியமளித்தார்.
விமல் வீரவன்சவின் ஹொகந்தர வீட்டில் அதிக வயக்கார மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழ்ந்த லஹிரு ஜனித் திஸாநாயக்க என்ற இளைஞரின் மரணம் தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விமலின் மகன் விபுதி மற்றும் அன்றைய தினம் வீட்டில் இருந்த இளைஞர்கள் நீதிமன்றில் நேற்று சாட்சியளித்துள்ளனர்.
கடுவெல நீதிமன்றில் மேலதிக மாவட்ட நீதிபதி அல்விஸிடம் சம்பவம் தொடர்பில் விபுதி வீரவன்ச பின்வருமாறு சாட்சியளித்துள்ளார்.
“அன்று ஒக்டோம்பர் 25ஆம் திகதி. எனக்கு நன்கு நினைவில் உள்ளது. மாலை 4 மணியளவில் நண்பர்கள் வீட்டிற்கு வருகை தந்திருந்தார்கள். அர்ஜுன், டிலீக்க, இசுரு, லஹிரு அண்ணா ஆகியோரே வருகை தந்திருந்தனர்.
நாங்கள் மேல் மாடிக்கு சென்று கதைத்துக் கொண்டிருந்த நிலையில் பின்னர் டீ.வி பார்த்துக் கொண்டிருந்தோம். மாலை 6.30 மணியளவில் அம்மா (சஷீ வீரவன்ச) வீட்டிற்கு வருகைத்தந்தார். அந்த பின்னர் நாங்கள் கீழ் மாடிக்கு சென்றோம். நாங்கள் மீண்டும் கதைக்க ஆரம்பித்தோம்.
இரவு 9 மணியவில் லஹிரு அண்ணா வெளியே சென்று 9.30 மணியளவில் மீண்டும் வந்தார். அதன் பின்னர் அம்மாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு மீண்டும் மேல் மாடிக்கு சென்று டீ.வி பார்த்தோம். இரவு 12.30 மணிவரை டீ.வி பார்த்து விட்டு நாங்கள் நித்திரைக்கு சென்றோம்.
நான் எனது அறையிலேயே உறங்கினேன். அர்ஜுன், இசுறு, டீலிக்க எனது அறைக்கு அருகில் உள்ள அறையில் நித்திரை செய்தார்கள். லஹிரு அண்ணா மேல் மாடியில் மெத்தை ஒன்றை போட்டு உறங்கினார். அடுத்த நாள் 9.30 - 10 மணி வரையில் தான் எழும்பினோம்.
அதன் பின்னர் நான் காலை உணவு பெற்றுக் கொள்வதற்காக கீழ் மாடிக்கு செல்லும் போதும் மேல் மாடியில் லஹிரு அண்ணா உறங்கிக் கொண்டிருந்ததனை நான் கண்டேன். நான் அவரிடம் பேசினேன். பல முறை கூப்பிட்டேன். அவர் கேட்காததனை போன்று விளையாட்டிற்கு செய்கின்றார் என்று நான் நினைத்தேன்.
நான் அவருக்கு அருகில் சென்று அவரை அடுத்த பக்கம் திருப்பினேன். அதன் போது அவர் உடம்பில் சில வித்தியாசங்களை கண்டேன். எனக்கு பயமாக இருந்தது.
பின்னர் கீழ் மாடிக்கு சென்று அம்மாவிடம் கூறினேன். அம்மா நம்பவில்லை. எனக்கு பயமாக இருந்தமையினால் நான் கீழ் மாடியிலேயே இருந்து விட்டேன். அம்மா லஹிரு அம்மாவிற்கு தொலைப்பேசி அழைப்பு மேற்கொண்டார். அதன் பின்னர் லஹிரு அண்ணாவின் அம்மா கூச்சலிட்டவாறு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமலின் மகனின் நண்பர் டிலியும் இங்கு சாட்சி வழங்கினார். விமலின் மகன் கூறிய விடயங்களையே அவரும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ad

ad