புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஜூலை, 2019

10 சிறுகட்சிகளுடன் 'மொட்டு' கூட்டணி

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் அதனுடன் கூட்டணி அமைக்கும் 10 கட்சிகளுக்கும் இடையில் இன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்காக 10 கட்சிகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன், அவற்றில் 10 கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.

மௌபிம ஜனதா கட்சி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமா கட்சி, லிபரல் கட்சி, நவ சிஹல உறுமய, ஜனநாயக தேசிய இயக்கம், எக்சத் லங்கா மகா சபா கட்சி மற்றும் பூமிபுத்திர கட்சி ஆகிய 10 கட்சிகளுடனே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.