புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஜூலை, 2019

மகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த சேரன்!

பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை பற்றிய தகவல்கள் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் சேரனின் குடும்பத்தை பற்றி பார்த்தால், சேரனின் மனைவியின் பெயர் செல்வராணி. மூத்த மகளின் பெயர் நிவேதா ப்ரியதர்ஷினி. இளைய மகளின் பெயர் தாமினி. இதில் இளைய மகள் தாமினி சேரனின் பேச்சை கேட்காமல் ஒருவரை காதலித்து அவருடன் சென்றுவிட்டார். இந்த பிரச்சனையினால் சேரன் முழுவதுமாக மனம் உடைந்துவிட்டராம்.

இதிலிருந்து மீளவே அவருக்கு மட்டுமில்லாமல் அவரது குடும்பத்திற்கே பல வருடங்கள் ஆகியுள்ளது. இதனால் தான் அவரால் முன்பு கொடுக்கப்பட்ட ஆட்டோகிராப், பொக்கிஷம் போன்ற தரமான படங்களை தற்போது கொடுக்க முடியவில்லையாம். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திருமணம் படமும் அவ்வளவாக ஒடவில்லை.

இதையெல்லாம் மறக்கவும் மீண்டும் புத்துயிர் பெறவும் தான் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளாராம். இதையே அவரது நண்பர் இயக்குனர் சமுத்திரகனியும் கடந்த மாதம் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.