புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2019

உயர்நீதிமன்றம் செல்கிறது சுதந்திரக் கட்சி

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் மாகாண சபையை கலைப்பதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவுசெய்துள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் மாகாண சபையை கலைப்பதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவுசெய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையொன்றும் சு.கவின் மத்திய செயற்குழுவில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சு.கவின் மத்திய செயற்குழு, கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு கூடியது. இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர,ஊவா மாகாண சபை முதலமைச்சர் சாமர சம்பத் அனைவரும் இணக்கம் வெளியிட்டால் ஊவா மாகாண சபையை கலைத்து ஒரே தினத்தில் அனைத்து மாகாணங்களுக்கும் தேர்தலை நடத்த முடியுமென தெரிவித்துள்ளார்.

ஆகவே, நீண்டகாலமாக இயக்கத்தில் இல்லாத மாகாண சபைத் தேர்தலையே முதலில் நடத்த வேண்டும். இது தொடர்பில் எமது கட்சியில் யோசனையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பில் எதிர்வரும் வாரம் உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரவும் முடிவு செய்துள்ளோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தேர்தல் ஆணையாளர் செயற்பட முடியுமென்றா

ad

ad