புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஜூலை, 2019

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் நேற்றுவியாழக்கிமை காலை அனுஷ்டிக்கப்பட்டது.வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஒன்று கூடினர்.

1983 ஆம் ஆண்டு கறுப்பு இதே நாளில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராட்ட முன்னேடிகளான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகள் மற்றும் அவ் இனக்கலவர வாரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட இனவாததத் தாக்குதல்களையும் உயிர்நீத்த பொது மக்களை நினைவு கூர்ந்து அஞ்சலிக்கப்பட்டது.


அஞ்சலி செலுத்துவதற்கான பொது ஈகைச்சுடர் தவிசாளரினால் ஏற்றப்பட்டதுடன் பிரதேச சபையின் உறுப்பினர்கள் கைகளில் மெழுவர்த்தியை ஏந்தியவாறு அஞ்சலித்தனர்.

தொடர்ந்து இனியொரு கறுப்பு யூலை வேண்டாம். இனவாதம் அரச இயந்திரம் முதல் சிவில் சமூகங்கள் வரையில் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளில் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உரைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது