புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஜூலை, 2019

புலிகள் மீதே முதலில் சந்தேகம்

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களையே முதலில் சந்தேகப்பட்டோம் என குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களையே முதலில் சந்தேகப்பட்டோம் என குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சஹ்ரான் குறித்து முதலில் காத்தன்குடியில் தான் அதிகமாக பேசப்பட்டது. அவர்களுடனான தொடர்புகள் வேறு எங்கும் இருக்கவில்லையா? குறிப்பாக வவுணதீவு சம்பவத்தில் இவர்களின் தொடர்பு இருக்கவில்லையா? என தெரிவு குழு சார்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “ஏப்ரல் 21ம் திகதிக்கு பின்னர் தான் வவுணதீவு சம்பவம் இவர்களினால் மேற்கொள்ளப்பட்டது என தெரிய வந்தது.முதலில் இரண்டு பொலிஸார் கொலை விடயத்தில் விடுதலைப் புலிகளின் நபர்களினால் தான் இந்த கொலை இடம்பெற்றது என்ற சந்தேகம் கொள்ளப்பட்டது.

பின்னர் தேடுதல் மூலமாக தான் குறிப்பாக கபூர் என்ற நபர் கைது செய்யப்பட்ட பின்னரே இது சஹ்ரான் குழுவின் வேலை என தெரிய வந்தது. தாக்குதல் இடம்பெற்ற பின்னர் தான் அனைத்தும் தொடர்புபட்டுள்ளன என தெரிந்தது.

வவுணதீவு சம்பவத்தில் விடுதலைப் புலிகளை சந்தேகப்பட்டோம். வேறு நபர்கள் குறித்து தெரியவில்லை.மாவனல்ல, காத்தான்குடி மோட்டார் சைக்கிள் வெடிப்பு சம்பவத்தின் பின்னர் தான் அனைத்துமே ஒன்றின் பின் ஒன்று தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது அவற்றை கண்டறிய முன்னர் குண்டு வெடித்துவிட்டது. அதுவரை யார் உரிய நபர் என தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.