புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 அக்., 2019

முன்னாள் போராளி குடும்பத்தோடு கைதுவீட்டில் இருந்தே குறித்த ஆயுதங்கள் இன்று (12) கைப்பற்றப்பட்டது

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் ஆயுதங்கள் உட்பட பெருமளவான இராணுவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று (11) கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியான ஜோசப் பீட்டர் ரொபின்சன் (36-வயது) என்ற சந்தேகநபரின் வீட்டில் இருந்தே குறித்த ஆயுதங்கள் இன்று (12) கைப்பற்றப்பட்டது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.அத்துடன் குறித்த முன்னாள் போராளியின் மனைவி (28-வயது) மற்றும் சகோதரி (23-வயது) ஆகியோரும் கைது செய்யப்பட்டுளளனர்.

இந்த மீட்பு நடவடிக்கையை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.இதன்போது, ரி-56 ரக துப்பாக்கி-1, பிஸ்டல்கள் -3, கைக்குண்டுகள் -5, ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் 150, பிஸ்டல் ரவைகள் 45, மடிக்கணினி ஒன்று, தொலைபேசிகள் -4, எம்.ரி.எம்.ரி ரக துப்பாக்கி ரவைகள் 7, டேட்டனேற்றர்கள் 45, ஜி.பி.எஸ்-1, டிஜிட்டல் கமெரா, சிறிய ரிமோட் வகைகள், குண்டுகளை வெடிக்க வைக்கப் பயன்படுத்தப்படும் வயர்கள், வெடிப்புக் கருவிகள், புலிகளின் தலைவர் பிராபகரன் உள்ள ரி-சேர்ட் உட்பட இன்னும் பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.