புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 அக்., 2019

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள்

கனடாவில் அனைத்து இனங்களை போலவும் எமக்கு ஒரு தமிழ் மையம் அமைய ஏதுவாக காலம் கூடி வந்துள்ளது.. கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென கனடாவில் உள்ள முக்கிய தமிழ் அமைப்புகளை உள்ளடக்கிய 8 பேர் கொண்ட வழிப்படுத்து குழுவொனறு சமூக ஆர்வலர்களின் கடின முயற்சியினால் கடந்த மார்ச் மாதம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வழிநடத்தல் குழு இற்றை வரையான முன்னெடுப்புகள் குறித்தும் தமிழ்ச் சமூக மையம உருவாக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெளிவு படுத்தப்பட்டது. கனடாவில் வாழும் தமிழ் சமூகம் தனக்கான ஒரு சமூக நிலையத்தை பல முனைப்புகளை கடந்த காலங்களில் மேற்கொண்ட போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் அனைத்து தரப்பினையும் ஒன்றிணைத்து இந்த வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டது.
கனடாவில் அனைத்து இனங்களை போலவும் எமக்கு ஒரு தமிழ் மையம் அமைய ஏதுவாக காலம் கூடி வந்துள்ளது.. தவற விடலாமா? கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre) ஒன்றை அமைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென கனடாவில் உள்ள முக்கிய தமிழ் அமைப்புகளை உள்ளடக்கிய 8 பேர் கொண்ட வழிப்படுத்து குழுவொனறு சமூக ஆர்வலர்களின் கடின முயற்சியினால் கடந்த மார்ச் மாதம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வழிநடத்தல் குழு இற்றை வரையான முன்னெடுப்புகள் குறித்தும் தமிழ்ச் சமூக மையம உருவாக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெளிவு படுத்தப்பட்டது. கனடாவில் வாழும் தமிழ் சமூகம் தனக்கான ஒரு சமூக நிலையத்தை பல முனைப்புகளை கடந்த காலங்களில் மேற்கொண்ட போதிலும் அது வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் அனைத்து தரப்பினையும் ஒன்றிணைத்து இந்த வழிநடத்தல் குழு உருவாக்கப்பட்டது.

திட்டமிடப்பட்டுள்ள தமிழ் சமூக மையமானது நிகழ்வுகளை நடத்துவதற்கான அரங்கம்(;( Auditorium ) மூதாளர்கள் நலன் பேணும் அம்சங்கள், பெண்களுக்கான செயல் திட்டங்களுக்கான வசதிகள், உடற்பயிற்சி கூடம், நூலகம், தமிழ் பண்பாட்டை வெளிப்படுத்தும் நுதன சாலை (Tamil Museum) போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஸ்காபுரோ பகுதியில் இந்த சமூக நிலையமைத்தை அமைப்பதற்குரிய நிலத்தை வழங்குவதற்கு ரொரன்ரோ நகர சபை இணக்கம் தெரிவித்துள்ளமையோடு குறித்த நிலத்தை அடையாளம் காணும் செயல்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதியில் உள்ள மத்திய மற்றும் மாகாண பிரதிநிதிகள் நகர சபை உறுப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்பும் இதற்கான பெறப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த மாதம் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் கூட்டு முதலீட்டு திட்டத்தின் கீழ் சமூக, கலாச்சார, பொழுதுபோக்கு அம்சங்களின் அடிப்படைக் கட்டமைப்பு உதவி வழங்கலுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளன. இதற்கான கால வரையறை நொவம்பர் 12ம் திகதி ஆகும். இந்த உதவியை தமிழ் சமூக நிலையத்தை உருவாக்கும் திட்டதிற்கு பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த உதவித் திட்டம் தமிழ் சமூக மையத்திட்டத்திற்கு வழங்கப்படுமானால் தமிழ்ச்சமூக மையம் அமைப்பதற்கான கட்டுமானச்செலவின் எழுபத்து மூன்று வீதத்தை (73%) அரச உதவியாகப் பெறக்கூடியதாக இருக்கும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்துவதற்கும் இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்காக வழிப்படுத்தற்குழு விரைந்து முழுமுயற்சிகளை எடுத்துவருகவதாகவும் செய்திளார் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்ச் சமுதாயத்துக்கு வாழ் நாளில் கிடைத்துள்ள மிக முக்கியமான சந்தர்ப்பம் ஆகும். தமிழ் சமூகத்திற்கு கிடைத்துள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாது பயன்படுத்திக்கொளவதற்கு தமிழ் சமூகம் தமது முழுமையாக ஒத்துழைப்பை வழங்க வேண்டியது காலத்தின் தேவையாகும். தமிழ்ச் சமூக மையம் அமைப்பதற்கான வழிநடத்தல் குழு இதற்கான எழுபத்துமூன்று வீத (73%) அரச நிதி உதவியை பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கும் அதில் வெற்றி பெறுவதற்கும் மிகுதி இருபத்தேழு வீதமான (27%) கட்டுமானச் செலவுவை தமிழ் சமூகம் வழங்கும் என்ற உறுதிப்பாட்டை வழங்க வேண்டியுள்ளது.

தமிழ்ச் சமூக மையத்துக்கான உத்தேச கட்டுமானச் செலவு நாற்பது (40) மில்லியன் ஆகும். இதில் 10.8 மில்லியன் டொலர்களைத் தமிழ் சமூகத்திடம் இருந்து திரட்ட வேண்டும் என்பதே பிரதான நிபந்தனையாகும். எமது தமிழ்ச் சமுதாயத்தினால் 10.8 மில்லியன் டொலர்களைத் முடியும் என்பதை நிதிப்பங்களிப்பு உத்தரவாதக் கடிதங்களினூடாக் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

எதிர் வரும் நெராவெம்பர் மாதம் 12ம் திகதிக்கு முன்னர் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு தமிழ் சமூக நிலையம் உருவாக்கப்படுவதில் ஆர்வம் உள்ள அமைப்புகள், ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் அமைப்புகள், சமூக நிறுவனங்கள், வர்த்த நிறுவனங்கள், தொழில் முனைவோர், வரத்;தக் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என சகலரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நிதிப்பங்களிப்பு உத்தரவாதம் மட்மே இப்போது கோரப்பட்டுள்ளது. இப்போது எவ்விதமான நிதி உதவியும்; வழங்கப்பட வேண்டியதில்லை என்பதும் மிக முக்கியமானது.

அரசாங்கத்தின் நிதி உதவி திட்டத்தின் கீழ் தமிழ் சமூக மைம் அமைப்பதற்கான இந்த திட்டம் தெரிவு செய்யப்பட்டால் பகுதி பகுதியாக இந்த நிதி உதவி தமிழ் சமூகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் இவ்வாறான நிதிப்பங்களிப்பு உத்தரவாதக் கடிதம் தந்து உதவக்கூடியதாக இருந்தால், info@tamilcentre.ca மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொண்டு அந்த படிவத்தை பெற்றுக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை வழிநடத்தல் குழுவின் இதுவரையான செயல்பாடுகுள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்த முழுமையான விபரங்களை http://tamilcentre.ca/ என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்