13 அக்., 2019

கனடா ஒன்ராரியோ வீட்டுக்குள் மூன்று சடலங்களால் பரபரப்பு!

கனடா- ஒன்ராறியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் அங்குள்ள மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கனடா- ஒன்ராறியோ பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் அங்குள்ள மக்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என ஒன்ராறியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒட்டாவாவிலிருந்து தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யோங் டவுன்ஷிப்பின் முன்னால் உள்ள கவுண்டி வீதி 5இல் உள்ள வீட்டிலிருந்தே, மூன்று சடலங்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மாலோரி டவுண் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் ஒருவர் குடியிருப்புக்கு வெளியே காணப்பட்டதாகவும், மேலும், இருவர் உள்ளே இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவமானது தனிப்பட்ட ஒரு சம்பவமாக தோன்றுவதாகவும், இவர்களின் மரணத்திற்கான காரணத்தினைக் கண்டறிவதற்கான உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக, ஒன்ராறியோ மாகாண பொலிஸ் குற்றவியல் புலனாய்வு பிரிவு, தடயவியல் அடையாள சேவைகள் பிரிவு மற்றும் ஒன்றாரியோ லீட்ஸ் கவுண்டி பிரிவின் அதிகாரிகள் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, அவர்களின் இந்த மரணத்திற்கான காரணம் தொடர்பாக ஏதாவது தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.