13 அக்., 2019

சிவாஜியை காப்பாற்றும் ரெலோவின் யாழ்.கிளை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைளை எடுக்கக் கூடாதென, ரெலோவின் யாழ்ப்பாணம் மாவட்டக் குழு தீர்மானம் எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்டக் கிளைக் கூட்டம், கட்சியில் மாவட்டத் தலைமை அலுவலகத்தில், நேற்று நடைபெற்றது.இதன்போதே, மாவட்டக் கிளை மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

கட்சிக்கு அறிவிக்காமல் சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிடுவதில் தவறுகள் இருந்தாலும், அது தொடர்பில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவையில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கானத் தீர்வு விடயத்திலும் ஏனைய பிரச்சினைகளுக்கானத் தீர்வு விடயத்திலும் வழங்கப் போகும் எழுத்து மூல வாக்குறுதிகளை ஆராய்ந்ததன் பின்னரே, தேர்தல் குறித்து, கட்சி நிலைப்பாட்டொன்றை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதுவரையில் சிவாஜிலிங்கம் மீது கட்சி கடும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடாதென்றும் கட்சியில் வழமையாக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் எடுக்கலாமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.