புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2020

புதிய ஆட்சியில் 1500 ரூபா வழங்குவேன் – சஜித் அறிவிப்பு

பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1500 ரூபாவை வழங்குவதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் நான் உறுதியளித்தேன். ஆயிரம் ரூபா வழங்கப்படும் என அவர்கள் அறிவித்தார்கள். அந்ததொகை கிடைக்குமா என்பதை காத்திருந்து பார்ப்போம்.

1000 ரூபா குறித்து திருப்திகொள்ளமுடியாது.எனினும், பொதுத்தேர்தல் வெற்றியோடு 1500 ரூபா என்ற இலக்கை நோக்கி பயணிப்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

சம்பளம் மட்டுமல்ல பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன.

தாய்,சேய் போசனை மட்டம் கீழ்நிலையில் இருக்கின்றது. இப்பிரச்சினைக்கு முழுமையாக முடிவுகட்ட வேண்டும்.எல்லா சுகாதார பிரிவுகளிலும் தாய், சேய்க்கான விசேட நிலையம் அமைக்கப்படவேண்டும்.

அதேபோல் தோட்டப்பகுதிகளிலுள்ள வைத்தியசாலை கட்டமைப்பை மேலும் அபிவிருத்தி செய்யவேண்டும்.மலையக மக்களின் வாழ்க்கை மற்றும் சமூகநிலையை மேம்படுத்த வேண்டும். இவை அனைத்துமே எமது இலக்காக இருக்கின்றது.

எனது தந்தையே மலையக மக்களுக்கு பிரஜா உரிமை வழங்கினார். எனவே, மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக புரட்சிகரமான அபிவிருத்தி திட்டங்கள் எமது ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

ad

ad