புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2020

தேர்தலிற்காக ஒய்வு பெற்றார் ரவிராஜ் சசிகலா?

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக படுகொலையான நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் மனைவி நேர காலத்துடன் தனது ஆசிரிய தொழிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
இதன் பிரகாரம் மார்ச் 2ம் திகதி முதல் தனது ஆசிரிய தொழிலிருந்து அவர் ஒய்வுபெறுகின்றார்.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கிளிநொச்சியில் அண்மையில் நடைபெற்றது. அதன் பின்னர் 14 பேர் கொண்ட வேட்பாளர் நியமனக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில், பெண்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியான சசிகலாவை களமிறக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் தலைமைத்துவ வெற்றிடத்தை கருத்தில் கொண்டு அவர் களமிறங்குகின்றார்.

இரு பிள்ளைகளது தாயாரான அவர் ரவிராஜ் மரணத்தின் பின்னராக ஒதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad