புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2020

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி- பிரித்தானியா உறுதி

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது.

தீர்மானம் 30/1 மற்றும் அதன் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான கொள்கைகளுக்கு நாங்கள் ஆழ்ந்த உறுதிபூண்டுள்ளோம்.

இந்த கொள்கைகள் அனைத்தையும் முன்னெடுத்துச் செல்லவும், சட்டத்தின் ஆட்சியினடிப்படையில் வளமான இலங்கையை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று ஐ.நாவிற்கான பிரித்தானிய தூதர் ரீட்டா பிரஞ்சு அறிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் அனைவரும் செழித்து வளரக்கூடிய ஒரு நீடித்த சமாதானத்தை நோக்கி முன்னேற வசதியாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவை, மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் ஒத்துழைப்பு மற்றும் உரையாடலைத் தொடர இலங்கை அரசாங்கத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்

ad

ad