ஹாலி–-எல விஞ்ஞானக்கல்லூரியிலிருந்து கடந்த 19ஆம் திகதி திருகோணமலை பகுதிக்கு மேற்படி கல்லூரி மாணவ, மாணவிகள் 87 பேரும் ஆசிரியர்கள் 8 பேருமாக கல்விச் சுற்றுலாவொன்றினை மேற்கொண்டிருந்தனர். கொமரன்கட மதவாச்சி குளத்தில், சுற்றுலாவுக்கு வந்த மாணவர்கள் பலர் குளிக்கச் சென்றிருந்த வேளையில், நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமானார்கள்.
இச்சம்பவத்தையடுத்து, ஊவா மாகாண கல்வித் திணைக்களம், ஊவா மாகாண ஆளுநர் ஆகிய இரு பகுதியினரால் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இக் கல்விச் சுற்றுலாவினை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்களின் கவனயீனமே இம்மாணவர்களின் மரணத்துக்கு காரணமென்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
நியமிக்கப்பட்ட இரு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் வெளிவரும் முன்பே, கல்விச் சுற்றுலாவினை ஏற்பாடு செய்திருந்த எட்டு ஆசிரியர்கள் குறிப்பிட்ட கல்லூரியிலிருந்து விசா ரணைகள் முடியுமட்டும் வேறு பாட சாலைகளுக்கு இணை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.