புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2020

சிக்ஸர்’ அடிக்காமலேயே 345 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி சாதனை

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.ஹம்பாந்தோட்டையில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 345 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் சதத்தினை பெற்றுக்கொண்ட அவிஸ்க பெர்னாண்டோ 127 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 119 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் செல்டன் கேட்ரெல் 4 விக்கெட்களையும் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

346 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 39.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தனது 16 ஆவது அரைச் சத்ததினை பூர்த்திசெய்த சாய் ஹோப் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் லக்சன் சந்தகன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன் நுவன் பிரதீப் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகனாக அவிஸ்க பெர்னாண்டோ தெரிவானார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி எஞ்சிய நிலையில் இலங்கை 2-0 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணியால் பெறப்பட்ட இந்த ஓட்ட எண்ணிக்கையானது ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர்கள் இல்லாமல் பெறப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது.

அத்துடன், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இலங்கையில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.

தொடர்ச்சியாக இலங்கையிடம் ஐந்து தடவைகள் மே.தீவுகள் அணி தோல்வியடைந்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை சிறந்த துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்திலும் பிரகாசித்த இலங்கை அணி 2-0 என கைப்பற்றியுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் முதலாம் திகதி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ad

ad