புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2020

ராதாவுக்கான ‘சீட்’டை உறுதிப்படுத்தினார் திகா! உள்நாடு

தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் மாத்திரமே போட்டியிடவுள்ளனர் என்பதை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் இன்று உறுதிப்படுத்தினார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் உட்பட மூவர் போட்டியிடுவோம் என குறிப்பிட்ட திகாம்பரம், தேசியப்பட்டியல் ஊடாகவும் ஒருவரை அழைத்துச்செல்வோம் என குறிப்பிட்டார்.

தொழிலாளர் தேசிய முன்னணியின் விசேட கூட்டம் இன்று ஹட்டன் டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

எனவே, தொழிலாளர் தேசிய சங்கத்தின் இரண்டு வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி எழுகின்றது.

தலைவர் என்ற வகையில் திகாம்பரம் களமிறங்குவது உறுதியாகியுள்ள நிலையில், அடுத்த நபராக உதயா போட்டியிடுவார் என்றும், தேசியப்பட்டியல் ஒதுக்கீடு திலகருக்கே வழங்கப்படும் எனவும் சங்கத்தின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் வேட்பாளர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவுள்ளது.

ad

ad