புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2020


சுவிஸ் கொரோனா நிலைமை
-----------------------------------------------
நோய் தோற்று வரைபின் படி கடந்த 21ஆம்  திகதி 1947 பேருக்கு  தொற்று வந்துள்ளது  அதியுச்ச எண்ணிக்கை இதுவென்றும் தெரிகிறது  தொடர்ந்து குறைவது போல  காணப்பட்ட்து  ஆனாலும் மீண்டும் சற்று கூடி உள்ளது கடந்த நாட்களில் தொற்று எண்ணிக்கை இப்படி அமைகிறது .மார்ச் 22 -901 , 23 -1046, 24-1609, 25-1079,26-989, 27-1466. 28- 981 29-775,30-963  31-683, ஏப்ரில் 01- 1163,01-1059,03-879,04-783.
 இதுவரை 1 லட்ஷத்துக்கும் மேல்பட்டொருக்கு  சோதனை நடந்துள்ளது
.அதில் 20 540 பேருக்கு  கொரோனா தொற்று கண்டிருக்கிறது .
சுமார் 540 பேர் முற்றிலும்  குணமாகி உள்ளனர்
இறப்பு எண்ணிக்கை  643 ஆகி உள்ளது  
ஆரம்பத்தில் டெஸ்ஸின் ஜெனீவா வோ வாலிஸ் மாநிலங்களில் அதிக பாதிப்பு  .இருந்தது .பின்னர்  அது  சூரிச் பெர்ன் பிரிபோர்க் பாசெல் மாநிலங்களுக்கும் கூடி உள்ளது 31  வயது முதல்  83  வயது வரை  தொற்றுக்குள்ளாகி இருக்கிறார்கள்
இறந்தவர்களில் 64 வீதமானோர்  ஆண்கள், .தொற்றுக்குள்ளாவோரிலும் ஆண்களே அதிகம்
இறந்தவர்களில் 94 வீதமானோர்  (சக்கரை வியாதி ,நுரையீரல் பாதிப்பு ,இதயம் சம்பந்தமானவை  போன்ற )முன்னரே எதாவது  ஒரு  நோயுள்ளவர்களாகவே  இருந்துள்ளனர்
டொச் மொழி மாநிலங்களில் அரசின் அவசரகால  விதிகளை கூடுதலானோர் கடைபிடிக்கின்றனர் 
 செங்காளன் மாநிலத்தில்  இளம்பராயத்தினர்  5  பேருக்கு மேல் கூடுவது பொழுதுபோக்குவது பொது இடங்களில் கூடுவது என  கட்டுப்பாடடை மீறுகின்றனர்


ad

ad