புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 ஏப்., 2020

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத் தொண்டர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாப மரணம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தில் தொண்டாற்றிய குடும்பத்தலைவர் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.ஆலய தொண்டர்கள் சிலர் இணைந்து மண்டபத்தை கொம்பிறசர் ஊடாக தண்ணீர் பாய்ச்சி கழுவிக் கொண்டிருந்த போது, அதிலிருந்து மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது.

அதன்போது குறித்த நபருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனையடுத்து அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.