புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 ஏப்., 2020

மக்களுடன் முரண்பட்ட சமுர்த்தி உத்தியோகஸ்தர்

மக்கள் எழுச்சிக்கும் ஊடகங்களின் பங்களிப்புக்கும் கிடைத்த வெற்றி.மருதங்கேணி சமுர்த்தி உத்தியோகத்தர்இடமாற்றம் ,விசாரணை
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் பொதுமக்களுடன் முரண்பாடாக நடந்து கொண்டு மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருப்பதாகத் தனக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டை விசாரணை செய்து அறிக்கையிடும்படி மாவட்ட சமூர்த்தி பணிப்பாளரை கோரியுள்ளதாகவும், விசாரணை முடிவில் குறித்த உத்தியோகத்தர் முறைகேடாக நடந்திருந்தால் அதற்குரிய தண்டனை வழங்குவதற்கும் பணித்துள்ளதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

விசாரணை இடம்பெறும் இந்த காலகட்டத்தில் தற்காலிகமாக குறித்த சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யும்படியும் மாவட்ட சமூர்த்தி பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்