புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

5 ஏப்., 2020

சற்று முன்: 5,903 பேருக்கு லண்டனில் கொரோனா தொற்று: பல மடங்காக அதிகரிப்பு

கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 6,000 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 10,000 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தியே இந்த 6,000 பேரை இவர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். இதனால் தொற்றின் விகிதம் பல மடங்காக அதிகரித்துள்ளது. இது இவ்வாறு இருக்க. இன்றைய தினம் இறப்பு எண்ணிக்கை 621ஐ தொட்டுள்ளது. இதனால் மொத்த இறப்பு 5,000ஐ தொட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே நிலையில் பிரிட்டன் சென்றால், இன்னும் சில வாரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என மருத்துவப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால் இன்னும் கூட பிரித்தானியர்கள் சிலர் இதனை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. வெளியே சுற்றித் திரிவதிலும். பூங்கா போன்ற இடங்களில் தேகப் பயிற்ச்சி என்ற போர்வையில் கூடிப் பேசி வருகிறார்கள் என்பது பெரும் கவலை தரும் விடையமாக உள்ளது.