புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2020

அதிர்ச்சிசெய்தி இல்-து-பிரான்சின்முழுவதுமான முதியோர் இல்லங்கள் 700 லும் கொரோனாத் தொற்று

இல்-து-பிரான்சில் உள்ள அடுத்தவரின் உதவியுடன தங்கிவாழும் முதியோர்களின் இல்லங்களான EHPAD களின் மொத்தத் தொகையான 700 இல்லங்களும், COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இல்லங்கள் ஒவ்வொன்றிலும் ஆகக் குறைந்தது ஒருவரிற்காவது கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது மிக வேகமாகப் பரவி விடும் ஆபத்து உள்ளதென்றும் இல்-து-பிரான்சின் பிராந்திய சுகாதார நிறுனமான ARS இன் இயக்குநர் ஒரெலியன் ரூசோ (Aurélien Rousseau) தெரிவித்துள்ளார்.

நேற்றைய தகவல்களின் படி, பிரான்சில் சாவடைந்த 17.167 பேரில், முதியோர் இல்லங்கள் மற்றும் முதியோர் சமூகப் பராமரிப்பு மையங்களில் இறந்தவர்கள் மட்டும் 6.254 பேர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது பிரான்ஸ் முழுவதும் சாவடைந்தவர்களின் மூன்றில் ஒரு பங்காகும். இது இல்-து-பிரான்சில் உள்ள முதியோர் இல்லங்களில் உள்ளவர்களின் உயிராபத்தினை வெளிக்காட்டி உள்ளது.

ad

ad