புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2020

பிரஞ்சுப் போர்க் கப்பலில் 668 கடற்படை வீரர்களுக்கு கொரோனா

பிரஞ்சு சார்ள்ஸ் டி கோல் (Charles de Gaulle) விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றும் கடற்படையினரில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா
தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு பணியாற்றும் 2000 கடற்படை வீரரில் 668 பேர் கொரோனா வைரஸ் நோயியானால் பாதிப்படைந்துள்ளனர் என பிரஞ்சுக் கடற்படையினர் தெரிவித்துள்ளர்.

சார்ள்ஸ் டி கோல் போர்க் கப்பலானது அட்லாண்டிக் கடற்பரப்பில் பயிற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில் குறித்த கப்பல் பிரெஞ்சு துறைமுகமான டூலோனுக்கு (port of Toulon) திரும்பியுள்ளது.



இருபது கடற்படையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடற்படையினருக்கு தொடர்ந்தும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 30 விழுக்காட்டினரின் மருத்துவ அறிக்கைகள் தாமதம் அடைவதால் தொற்று நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.

கடந்தவாரம் 10 கடற்படையினர் தொற்றாளர்களாக இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்கள் உடனடியாக நாட்டுக்கு திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளனர்.



தற்போது விமானத் தாங்கிக் கப்பல் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இதுவரை பிரான்சில் 17,167 பேர் கொரோனா தொற்று நோயில் உயிரிழந்துள்ளனர்.

ad

ad