புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஏப்., 2020

கொரோனா தொடர்பில் பிரான்சில் இருந்து வெளிவரும் மகிழ்ச்சியான செய்தி

பிரான்சில் கொரோனா தொற்றுக்கு மருத்துவத்துறையினர் இலக்காவது குறிப்பிடும் அளவிற்குக் குறைந்துள்ளதாக பாரிஸ் மருத்துவமனைகளின் அமைப்பான AP-HP தெரிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப் போராடிவரும் மருத்துவத் துறையினர் , துரதிஸ்டவசமாக நாளுக்கு நாள் வைரஸ் தொற்றிற்கு இலக்காகி வருகின்றனர்.


பிரான்சில் இதுவரை ஏழு மருத்துவர்கள் கொரோனாவிற்குப் பலியாகியுள்ளனர். தற்போது மருத்தவத்துறையினர் கொரோனாத் தொற்றிற்கு இலக்காவது குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மார்ச் 23 ஆம் திகதி உள்ளிட்ட அந்த வாரத்தில் மட்டும் நாள் ஒன்றிற்கு 190 மருத்துவத் துறையினர் கொரோனாத் தொற்றிற்கு இலக்காகி உள்ளனர்.


இதுவே மார்ச் 30 ஆம் திகதி உள்ளிட்ட வாரத்தில் நாள் ஒன்றிற்கு 114 பேர் தொற்றிற்கு ஆளாகி உள்ளனர்.


தற்போது ஏப்ரல் 6 தொடக்கம் இதுவரை தொற்று வீதம் குறைவடைந்து நாளொன்றிற்கு 77 பேர் தொற்றிற்கு உள்ளாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் மருத்துவத்துறையில் ஏப்ரல் 12 ஆம் திகதி வெளியான கணக்குகளின் அடிப்படையில் கொரோனாவுக்கு இலக்கான மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை 3,800 என்பது குறிப்பிடத்தக்கது