புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

17 ஏப்., 2020

யாழில் ஊரடங்கு தளர்த்தும் சாத்தியம் இப்போதைக்கு இல்லை -இப்படி சொல்கிறார்  பாதுகாப்பு செயலாளர் .உறவுகளே கடந்த வாரம்  நான்  ஒரு  செய்தி வெளியிட்டிருந்தேன்   அரியாலை, தாவடி, மானிப்பாய் மக்கள்  படும்  துன்பம் பற்றியும் தனிமைப்டுத்தப்படட இந்த கிராமத்தின் அவதி பற்றியும் . பார்த்து விட்டு லண்டன்  வாழ்  உறவு ஒன்று எனக்கு கண்டன விமர்சனம்  எழுதுகிறது அது உண்மை இல்லையாம்  தான்  அங்கெ  தாவடியில் இரண்டு மாதமாக  ,இருக்கிறாராம்  ஒரு பிரச்சினையும் இங்கே இல்லை பொய்யான  செய்தி அங்கெ  இருந்து போடாதீர்கள் என்று .இங்கே இயல்பான வாழ்க்கை தான் ,நடக்கிறது எழுதுவது போலில்லையாம் .உறவுகளே  யாழ் மாவடடம்  இன்று  எதனை நாளாக ஊரடங்கில் மாட் டிதவிக்கிறது  மக்களின் வாழ்க்கை எவ்வளவு  அல்லோகலப்படுகிறது  ஊரடங்கு போட் ட  அரசாங்கம் மக்களுக்கு  என்ன  நிவாரணம் வழங்கியது , எந்த நிறுவனம்  எவ்வளவு  நிவாரணம் வழங்கியது  மக்களுக்கு நிவாரணங்கள் எங்கே இருந்து கிடைக்கிறது  எந்த அரசியல்வாதி எந்த கட்சி  எந்த பிரமுகர்  என்ன  கொடுக்கிறார்  எங்கே  இருக்கிறார்   என்றெல்லாம் மக்கள் அறிவார்கள்  நான் அறிந்த வரையில் அரசாங்கம்   வயது கூடிய சிலருக்கு நிவாரணமாக  சிறிய தொகை  பணம் கொடுப்பது உண்மை  .இதனை விட சமுர்த்தி கொடுக்கும் பணமோ  பொருட்களோ   கடன் அடிப்படையிலானது என்றே  அறிகிறேன் .  மற்றும்படி அரசு  ஏதும் நிவாரணம்  எங்கே  எப்படி கொடுக்கிறது என்று யாரும் அறிந்தால்   விபரம்  தாருங்கள் .இந்த  ஊரடங்கு நேரத்தில்  மக்கள் படும் அவதி  தாமாக  அனுபவித்து பார்த்தல்  தான் தெரியும் . üஆலா üபிரமுகர்கள் அரசாயல்வாதிகள் கட்சிகார்கள் காணாமலே  போயிருக்கிறார்கள் . நேற்றுகூட ஒரு அரசியல்வாதி இருந்தாப்போல  ஓடி வந்து  தேர்தல் நடத்துவது பற்றி  பேசிகிறார் .மக்களுக்கு கிடைக்கும் நிவாரகணகளில் ஏராளமானவை வெளிநாட்டு உறவுகளினாலேயே  வழங்கபடுகிறது ஓரளவு உள்ளூர்வாசிகளால்  வழங்கப்படுவதும் உண்மை . நிவாரணிகளை  வழங்கும் தொண்டர்கள் தான் பாவம்  வீட்டிலும் பேச்சு நாட்டிலும் பேச்சு கொரோனா பயம் அரச நிர்வாக நெருக்கடி .  நடுநிலையாக  நோக்கினால்  ஒரு கட்சி சார் பிரமுகர்களும் தொண்டர்களும்  இன்னும்  பல பொது சமூக அமைப்புகளும்  தனிப்பட்டவர்களும்   வெளிநாட்டு மக்களும்  மக்களுக்கு கரம்  கொடுக்க உயிரை பணயம் வைத்து  பாடுபடும் தொண்டர்கள் மறுபுறம் ஓடித்திரி கிறார்கள் பாராட்டுவோம்