புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஏப்., 2020

ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா பாதிப்பு குறைந்தது எப்படி? வெளியான தகவல்

உலகில் கொரோனா வைரஸால் மிகவும் பாதிப்புக்குள்ளான இத்தாலி, அதை எப்படி கட்டுக்குள் கொண்டு வந்தது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதில் கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை கொண்ட நாடுகளின் பட்டியலில் இத்தாலி தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதுவரை அங்கு 165,155-பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 21,645 பேர் உயிரிழந்துள்ளனர்.

இப்போது இத்தாலி கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. அங்கு ரத்த பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுவதற்கு நல்ல பலன் கிடைத்துவருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அறிகுறி தெரியாதவர்கள் உடலின் ரத்த பிளாஸ்மாவில் வைரசை எதிர்க்கக்கூடிய ஆன்டிபாடி உருவாகிறது.

இந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ரத்த பிளாஸ்மாவை கொடையாக பெற்று, நோயாளிகளுக்கு செலுத்தும்போது பாதிக்கப்பட்டவர் ரத்தத்திலும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகிறது.


தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு பிளாஸ்மா செலுத்தப்படுவது அவர்களது நோயின் தீவிரத்தை குறைப்பதில் முக்கிய பங்காற்றுவதாக லம்பார்டி நகர மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவிக்கிறார். வடக்கு இத்தாலியில் பிளாஸ்மாவை கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த சிகிச்சை முறை இன்னும் சோதனை அடிப்படையிலேயே பயன்படுத்தப்பட்டு வருவதாக இத்தாலி தெரிவித்துள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிறுவனம் ஒன்று, குணமடைந்தவர்களிடம் இருந்து பிளாஸ்மாக்களை கொடையாக பெற்றுவருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் கொரோனாவுக்கான பிளாஸ்மா சிகிச்சை மாதிரி நடைமுறைக்கு வரும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad