புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2020

சர்வதேச போட்டிகளில் நுழைந்த யாழ்ப்பாணத்தின் சுழற்பந்து வீச்சாளர்

www.pungudutivuswiss.com
லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் நேற்று இடம்பெற்ற கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி சார்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த வியஸ்காந்த முதல் முறையாக போட்டியில் கலந்து கொண்டார்
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து கிரிக்கெட் விளையாட்டிற்கு பிரவேசித்த வியஸ்காந்த் வலது கை சுழல்பந்து வீச்சாளராவார்.

கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணியில் பிரதிநிதித்துவப்படுத்தி அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கு எதிராக இடம்பெற்ற உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் இரண்டில் கலந்து கொண்டதோடு இதன்போது 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில், நேற்று தனது முதலாவது சர்வதேச போட்டியில் விளையாடிய வியஸ்காந்த் 4 ஓவர்களை வீசி 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். அவர் தனது முதலாவது விக்கெட்டாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தீவ்ஸை வீழ்த்தியமை சிறப்பம்சமாகும்.

ad

ad