வியாஸ்காந்த் யாழ்ப்பாணத்திலிருந்து எல்பிஎல் அணிக்காக விளையாடும் முதலாவது வீரர் என்ற பெருமையைத் தனதாக்கியுள்ளதுடன்
கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி இலக்கை விரட்டி துடுப்பெடுத்தாடத் தொடங்கிய போது அடுத்தடுத்து நான்கு ஓவர்களையும் சிறப்பாக வீசி அசத்தியிருந்தார் இவர்.
இதில் தனது மூன்றாவது ஒவரை வீசிய போது இலங்கை அணியின் மிகச்சிறந்த சகலதுறைவீரரும் முன்னாள் அணித்தலைவருமான அஞ்சலோ மத்தியுஸ் தனக்கு எதிரே நிற்கின்றார் என்று அஞ்சாது சிறப்பாக பந்துவீசி மத்தியுஸ் ஒரு சிக்ஸரையும் பவுண்டரியையும் அடித்த போதும் கலங்காது எல்.பி.எல் அறிமுகத்தில் கைப்பற்றிய முதலாவது விக்கட்டாக அஞ்சலோ மத்தியுஸின் விக்கட்டை தனதாக்கி சிங்கள மக்களின் பாராட்டையும் பெற்றார்