புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2022

வரலாறு காணாத தொற்றும் சாவுகளும்! வைத்தியசாலையில் 30.000 நோயாளிகள்

www.pungudutivuswiss.com

25 January, 2022, Tue 20:29   |  views: 6255


தொடர்ந்து கொரோனாச் சாவுகளும் தொற்றுக்களும் என்றுமில்லாத அளவு உச்சம் நோக்கிச் சென்ற வண்ணமே உள்ளன.
 
கடந்த 24 மணிநேரத்தில் என்றுமே இல்லாதவாறு  501.635 பேரிற்குக் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஆரம்பித்ததில் இருந்து, பதினேழு மில்லியனைத் தாண்டி 17.302.548 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
மீண்டும் கடந்த 24 மணிநேரத்தில் அதிர்ச்சியேற்படுத்தும் விதமாக 467 பேர் சாவடைந்துள்ளனர். இதனுடன் பிரான்சில் மொத்தமாக 129.489 பேர் கொரோனாவினால் சாவடைந்துள்ளனர்.
 
ஒரு இலட்சத்தினையும் தாண்டி 102.086 பேர் வைத்தியசாலைகளிலும், 27.403 பேர் சமூக மற்றும் முதியோர் இல்லங்களில் சாவடைந்துள்ளனர்.
 
மருத்துவமனைகளில் 30.189 பேர் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில்  3.741 பேர் உயிராபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது அன்றாடம் பெருமளவில் அதிகரித்துச் செல்கின்றது.
 
 
தேசிய அளவிலான தொற்று விகிதமானது, திடீரென பெரும் உச்சமடைந்து 100.000 பேரிற்கு 50 இனைத் தாண்டினாலே பெரும் எச்சரிக்கை நிலை எனும் நிலையில், உச்ச ஆபத்தாக நாளிற்கு நாள் அதிகரித்து 100.000 பேரிற்கு 3.726.43 என்ற விகிதத்தில் உள்ளது. 
 
நாளிற்கு நாள் அதிகரித்து, வைத்தியசாலைகளின் அழுத்தம் 75 சதவீதமாக உச்சமடைந்துள்ளது.

ad

ad