மகிந்த ராஜபக்சவின் கணக்கில் இருந்து பணம் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவ்வப்பொழுது ஏடிஎம் அடையைப் பயன்படுத்தி, பணம் பெறப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 35 மில்லியன் ரூபா வரை பிரதமரின் கணக்கில் இருந்து திருடப்பட்டமை தெரியவந்துள்ளது. இதேவேளை, 2015 ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னரும் உதித லொகு பண்டார மகிந்த ராஜபக்சவின் செயலாளராக கடமையாற்றினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான W.J.M. N லொக்கு பண்டாரவின் மகன் உதித லொக்கு பண்டார கடந்த பொதுத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. |