புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2022

ஊழலுக்கு எதிரான தரவரிசையில் கடும் பின்னடைவை சந்தித்த சுவிஸ்! [Wednesday 2022-01-26 08:00]

www.pungudutivuswiss.com

பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலைப் பொறுத்தவரை சுவிட்சர்லாந்து ஒப்பீட்டளவில் சுத்தமான நாடாகக் கருதப்பட்டு வந்தாலும், சமீபத்திய தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பாக உறவுமுறைகளுக்கே முன்னுரிமை என்ற குற்றச்சாட்டுகள் பரவாலாக கூறப்பட்டு வரும் நிலையில், தனியார் துறை ஊழல் மற்றும் பணமோசடியை செயல்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலைப் பொறுத்தவரை சுவிட்சர்லாந்து ஒப்பீட்டளவில் சுத்தமான நாடாகக் கருதப்பட்டு வந்தாலும், சமீபத்திய தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தின் பொதுத் துறை நிறுவனங்களில் குறிப்பாக உறவுமுறைகளுக்கே முன்னுரிமை என்ற குற்றச்சாட்டுகள் பரவாலாக கூறப்பட்டு வரும் நிலையில், தனியார் துறை ஊழல் மற்றும் பணமோசடியை செயல்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறது

இந்த நிலையில் ஊழலுக்கு எதிரான தரவரிசையில் இந்தமுறை சுவிட்சர்லாந்து கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. 2020ல் 3ம் இடத்தில் இருந்த சுவிஸ் 2021ல் 7வது இடத்திற்கு சரிந்துள்ளது.

ஊழலுக்கு எதிரான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் டென்மார்க் உள்ளது. அதனைத் தொடர்ந்து பின்லாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளது.

குறித்த பட்டியலில் நார்வே, சிங்கப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகளும் சுவிட்சர்லாந்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. முதல் 10 நாடுகளில் நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் ஜேர்மனியும் இடம்பெற்றுள்ளன.

போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளான தெற்கு சூடான், சிரியா மற்றும் சோமாலியா ஆகியவை குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad