புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜன., 2022

பூஸ்டர் டோஸ் பெறாதவர்களுக்கு ஜெர்மனி அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!

www.pungudutivuswiss.com

ஜேர்மனியில் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையில், அவர்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தொற்றிய ஒருவருடன் தொடர்பிலிருந்ததால் தனிமைப்படுத்தலுக்குச் செல்லும் ஒருவரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் நிலையில், அவர் பூஸ்டர் டோஸ் பெறாதவராக இருந்தால், இதுவரை அரசு அத்தகையோருக்கு வழங்கி வந்த இழப்பீடு இனி அவருக்கு கிடைக்காது.

ஜேர்மனியில் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாதவர்கள் தனிமைப்படுத்தப்படும் நிலையில், அவர்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கப்படாது என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தொற்றிய ஒருவருடன் தொடர்பிலிருந்ததால் தனிமைப்படுத்தலுக்குச் செல்லும் ஒருவரின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் நிலையில், அவர் பூஸ்டர் டோஸ் பெறாதவராக இருந்தால், இதுவரை அரசு அத்தகையோருக்கு வழங்கி வந்த இழப்பீடு இனி அவருக்கு கிடைக்காது

கடந்த ஆண்டு அக்டோபர் அல்லது அதற்கு முன் கொரோனா தடுப்பூசி பெற்று, இதுவரை பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொள்ளாதவர்கள் இந்த விதியால் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.

அத்துடன், இன்னமும் முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள், அதாவது, ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களையும் இந்த விதி பாதிக்கும்.

யாருக்கெல்லாம் விதிவிலக்கு?

புதிய விதிகளின்படி, பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள், மற்றும் கடந்த மூன்று மாதங்களுக்குள் தங்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியைப் பெற்றவர்கள் ஆகியோர், கொரோனா தொற்றுடைய ஒருவருடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தால், அவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது.

ஆனால், அவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படவேண்டும். இத்தகையோர் தனிமைப்படுத்தப்படும்போது, அவர்கள் இழந்த ஊதியத்துக்கு இழப்பீடு உண்டு.

ad

ad