புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2022

சமஷ்டி தீர்வே வடக்கு,கிழக்கிற்கு உண்மையான அபிவிருத்தியை பெற்று கொடுக்கும்!

www.pungudutivuswiss.com


பிளவுபடாத இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு உண்மையான மற்றும் சிறந்த அபிவிருத்தியை பெற்று கொடுக்கும்.
அதிகார பகிர்வு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க நாடளாவிய ரீதியில் செயற்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பிளவுபடாத இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு உண்மையான மற்றும் சிறந்த அபிவிருத்தியை பெற்று கொடுக்கும். அதிகார பகிர்வு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்க நாடளாவிய ரீதியில் செயற்திட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

    

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளில் புறக்கணிப்புக்கள் மாத்திரம் காணப்படுகின்றன.அரசியல் உரிமை ஊடாகவே அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதிகார பகிர்வு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் செயற்திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.ஒருசில இனவாதிகள் அதிகார பகிர்வு தொடர்பில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தார்கள்.

இலங்கை மேலவை கூட்டணி என்பதை அமைத்து தற்போது மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பிரதான நகரங்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டம் எம்.சி.சி ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தை விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பினர்கள் தான் இல்லாமலாக்கினார்கள்.

எம்.சி.சி தொடர்பில் தவறான நிலைப்பாட்டை இவர்கள் தான் தோற்றுவித்தார்கள்.பிளவுபடாத இலங்கைக்குள் தான் அதிகாரத்தை கோருகிறோம்.அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்களை வழங்குங்கள்.

தென்மாகாணத்திற்கு அதிகாரம் வேண்டாம் என்றால் அது உங்களின் பிரச்சினை.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அபிவிருத்தியும்,அரசியல் உரிமையும் இல்லாத நிலை காணப்படுகிறது.எமது உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறோம் என்றார்

ad

ad