புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2022

வெளிநாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்களின் கால்கள் வெட்டப்பட்டன- வெளியான அதிர்ச்சி தகவல்

www.pungudutivuswiss.com
நாட்டில் உள்ள அப்பாவி பொதுமக்களை சுற்றுலா விசா ஊடாக வெளிநாடுகளுக்கு கடத்தி அவர்களின் வாழ்க்கையை மாத்திரமல்ல அவர்களது குடும்பத்தினரது வாழ்வையும் சீரழிக்கும் நடவடிக்கையாக தற்போது சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் கடத்தல்காரர்களின் செயற்பாடுகள் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். 

இன்று நாடாளுமன்றில் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கள் மீதான வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

06 இலங்கையர்களின் கால்கள் வெட்டப்பட்டன

“இன்று ஒருவர் தனக்கு அழைப்பொன்றை மேற்கொண்டு, ரஷ்யாவிற்கு ஒருவர் சென்று அங்கிருந்து லித்துவேனியாவுக்கு செல்ல முற்பட்ட போது அவரது இரு கால்களும் வெட்டப்பட்டுள்ளன. 

வெளிநாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்களின் கால்கள் வெட்டப்பட்டன- வெளியான அதிர்ச்சி தகவல் | In Sri Lanka S Crisis Refugees

மேலும், இவ்வாறே சமீப நாட்களாக ரஷ்யாவிலிருந்து லித்துவேனியாவுக்கு சென்ற 6 பேரின் கால்கள் வெட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு என்ன நடந்தது, தேடிப்பார்க்க முடியுமா, அவர்களது குடும்பங்களுக்கு இதை பற்றி அறியப்படுத்த முடியுமா, அதற்கான முறையான திட்டமிடல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிடம் இல்லை.

இது போன்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்ப்பதற்கு முதலில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

வெளிநாடுகளில்  இலங்கை மக்களின் நிர்க்கதி நிலை

மேலும், “டுபாய் நகருக்கு சென்றால், அங்குள்ள நடைபாதைகளில், பூங்காக்களில், வீதியோரங்களில், பல்பொருள் அங்காடிகள் என ஆங்காங்கே இலங்கை மக்கள் நிர்க்கதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

வெளிநாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்களின் கால்கள் வெட்டப்பட்டன- வெளியான அதிர்ச்சி தகவல் | In Sri Lanka S Crisis Refugees

காலியில் இருந்து டுபாய் சென்றிருந்த செனவிரத்ன சிங்கள மொழியில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது, 15 பேர் வரை அவரை சூழ்ந்துக்கொண்டு ஏதேனும் பணம் வழங்குமாறு கோரியுள்ளனர்.

இதுதான் உண்மையான நிலைமை. எனவே இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு ஆராய்ந்து தீர்வொன்றை வழங்குமாறும்” இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். 

“வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு பொருத்தமான பயிற்சியை இங்கு வழங்குவதோடு, வெளிநாடுகளுக்கான மனித கடத்தல்களை தடுத்து, அப்பாவி மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதோடு, எமது நாட்டின் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படாமல் பாதுகாக்குமாறும்” சந்திம வீரக்கொடி நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டார். 

வெளிநாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இலங்கையர்களின் கால்கள் வெட்டப்பட்டன- வெளியான அதிர்ச்சி தகவல்

ad

ad