புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 டிச., 2022

பிரேசிலுடனான நொக் அவுட் போட்டிக்கு தென் கொரியா தகுதி; வென்றும் வெளியேறியது உருகுவே

www.pungudutivuswiss.com
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் ஆரம்ப சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. சனிக்கிழமை (03) தொடக்கம் காலிறுதிக்கு முன்னேறும் அணிகளை தீர்மானிக்கும் 16 அணிகள் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் குழுநிலை போட்டிகளின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை (02) நான்கு போட்டிகள் நடைபெற்றன. இதில் பிரேசில் அணி கெமரூனிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்ததோடு தென் கொரிய அணி போர்த்துக்கல்லை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

சுவிட்சர்லாந்து த்ரில் வெற்றி

செர்பியாவுக்கு எதிரான பரபரப்பான கடைசி குழுநிலைப் போட்டியில் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டிய சுவிட்சர்லாந்து உலகக் கிண்ணத்தின் நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

கட்டாரின் 974 அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியை சமநிலை செய்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்று களமிறங்கிய சுவிட்சர்லாந்து 20ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தி முன்னிலை பெற்றது. எனினும் செர்பிய அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை பெற்று ஆதிக்கம் செலுத்த பதிலுக்கு சுவிட்சர்லாந்தும் மற்றொரு கோலை புகுத்தியது.

இதனால் முதல் பாதி ஆட்டம் முடியும்போது இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை பெற்றிருந்தன.

>> ஜெர்மனி, பெல்ஜியம் வெளியேற்றம்; நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது ஜப்பான், மொரோக்கோ

எனினும் இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்த மூன்று நிமிடங்களிலேயே சுவிட்சர்லாந்து மற்றொரு கோலை திருப்ப அந்த அணி 3-2 என முன்னிலை பெற்றதோடு போட்டி முடியும் வரை அதனை தக்கவைத்துக்கொள்ள சுவிட்சர்லாந்தால் முடிந்தது.

இதன் மூலம் சுவிட்சர்லாந்து அணி G குழுவில் மொத்தம் 6 புள்ளிகளை பெற்று பிரேசிலுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்தது.

இதன் மூலம் சுவிட்சர்லாந்து நொக் அவுட் போட்டியில் போர்த்துக்கல்லை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் போட்டி இலங்கை நேரப்படி எதிர்வரும் புதன்கிழமை (07) அதிகாலை நடைபெறும்.

பிரேசிலை வீழ்த்தியது கெமரூன்

வின்சன்ட் அபூபக்கர் புகுத்திய கடைசி நேர கோல் மூலம் பிரேசிலுக்கு எதிராக 1-0 என கெமரூன் அணி வரலாற்று வெற்றியை சுவீகரித்தது. எனினும் கெமரூனால் உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல்போனது.

லுசைல் அரங்கில் இலங்கை நேரப்படி சனிக்கிழமை அதிகாலை நடந்த G குழுவுக்கான இந்தப் போட்டியில் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரேசில் இரண்டாம் நிலை அணி ஒன்றுடனேயே களமிறங்கியது.

இந்நிலையில் போட்டியின் முழு நேரம் வரை எந்த அணியும் கோல் பெறாதபோதும் 92ஆவது நிமிடத்தில் வைத்து அபூபக்கர் தலையால் முட்டி கோல் புகுத்தி கெமரூனை வெற்றிபெறச் செய்தார்.

>> LPL போட்டி மத்தியஸ்தர்கள் குழாத்தில் பிரதீப் ஜயப்பிரகாஷ்!

எனினும் மகிழ்ச்சி மிகுதியால் தனது மேலாடையை கழற்றிய அபூபக்கர் இரண்டாவது மஞ்சள் அட்டையை பெற்றார்.

கெமரூன் அணி இதற்கு முன்னர் கடைசியாக உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் வெற்றியீட்டியது 2002ஆம் ஆண்டு சவுதி அணிக்கு எதிராகவாகும்.

இதன்படி G குழுவில் முதலிடத்தை உறுதி செய்த பிரேசில் அணி நொக் அவுட் போட்டியில் தென் கொரியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இலங்கை நேரப்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (06) அதிகாலையில் நடைபெறவுள்ளது.

தென் கொரியா முன்னேற்றம்

கடைசி நேரத்தில் பெற்ற அபார கோல் மூலம் போர்துக்கல் அணியை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென் கொரிய அணி உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.

கட்டாரின் கல்வி நகர அரங்கில் H குழுவுக்காக வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற போட்டியில் ஐந்தாவது நிமிடத்திலேயே போர்த்துக்கல் கோல் பெற்றது. டியோகோ டலொட் பரிமாற்றிய பந்தை ரிகார்டோ ஹோடா கோலாக மாற்றினார்.

எனினும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியுடன் ஆடிய தென் கொரியா 27ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது.

>> IPL ஏலத்தில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு 2 கோடி!

தென் கொரியா அடித்த கோனர் பந்து போர்த்துக்கல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரோனால்டோவிடம் பட்டு வந்தபோது அதனை கிம் யங் க்வோன் இலகுவாக கோலாக மாற்றினார்.

போர்த்துக்கல் ஏற்கனவே 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற்றம் கண்ட நிலையில் இந்தப் போட்டியில் ஆறு மாற்றங்களுடனேயே களமிறங்கியது. எனினும் அந்த அணி தொடர்ந்தும் வலுவாகவே இருந்தது.

1-1 என்ற கோல் வித்தியாசத்தில் இழுபறியோடு நீடித்த போட்டி மேலதிக நேரத்திற்கு சென்றது. தனது இடது கண்ணில் சத்திர சிகிச்சை செய்து கொண்டு காயத்தை பாதுகாக்க முகக் கவசத்துடன் ஆடும் தென் கொரிய அணித்தலைவர் சொன் ஹியுன் மின் 91ஆவது நிமித்தில் எதிரணி கோல் கம்பத்திற்கு அருகில் பந்தை லாவகமாக பரிமாற்ற அதனை பெற்ற ஹ்வான் ஹீ சான் கோலாக மாற்றி தென் கொரியாவை கரைசேர்த்தார்.

உருகுவேயிற்கு ஏமாற்றம்

கானாவுக்கு எதிரான H குழு போட்டியில் உருகுவே 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியபோதும் அது உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது.

இந்தக் குழுவில் போர்த்துக்கல் அணியை தென் கொரியா வீழ்த்தியதாலேயே உருகுவேயிற்கு இந்த நிலை ஏற்பட்டது. புள்ளிப் பட்டியலில் உருகுவே மற்றும் தென் கொரியா இரு அணிகளும் தலா 4 புள்ளிகளை பெற்றபோதும் தென் கொரியாவை விடவும் உருகுவே குறைவான கோல்களை பெற்றது அதனை உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேற்றியது.

>> அகில இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகள் நாளை ஆரம்பம்

அல் ஜனூப் அரங்கில் நடைபெற்ற போட்டியின் முதல் பாதியிலேயே அதிரடியாக ஆடி உருகுவே பெற்ற இரண்டு கோல்களும் அந்த அணி வெற்றியீட்ட போதுமாக இருந்தது. ஜியோர்ஜியன் டி அர்ராஸ்கேட்டா 26, 32ஆவது நிமிடங்களில் இரட்டை கோல் பெற்றார்.

இதன்போது 21ஆவது நிமிடத்தில் கானாவுக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிட்டியபோதும் அந்த அணி அதனைத் தவறவிட்டது.

ad

ad