புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2025

சற்றுமுன் தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

www.pungudutivuswiss.com
நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


ரோபோ சங்கர்

ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்ற போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சற்றுமுன் தென்னிந்திய நடிகர் ரோபோ சங்கர் காலமானார் | Actor Robo Shankar Death News Tamil

ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியதால் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துள்ளாரர்.

இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

ad

ad