தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எடுத்தியம்பும் ஆவணக் காட்சியகம் நாளைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
"பார்த்திபன் திலீபனாக... திலீபன் தியாக தீபமாக..." என்னும் தொனிப்பொருளுடன் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த ஆவணக் காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள காணியினை மாநகர சபையிடம் இருந்து இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருந்த நிலையில் , கடந்த காலங்களில் ஆவணக் காட்சியகம் அமைத்து வந்தவர்களை குழப்பும் செயல் என பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததை அடுத்து , அக்காணியினை பெறும் முயற்சியை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கைவிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.