புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2025

மல்லாவி பாலி நகர் சிறிலங்கா இராணுவ முகாமின் கட்டளை அதிகாரிகதிரை பறிபோனது?

www.pungudutivuswiss.com

பாதாள உ

லக குழுவைச் சேர்ந்த கொமாண்டோ சலிந்தவுக்கு ரி 56 ரக துப்பாக்கி ரவைகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மல்லாவி பாலி நகர் சிறிலங்கா இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியான, லெப். கேணல் தர அதிகாரியே, கொமாண்டோ சலிந்தவுக்கு 260 ரவைகளை விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்டவுடன் இராணுவத்தில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் .

இதனிடையே, கொமாண்டோ சலிந்தவுக்கு, கைது செய்யப்பட்ட லெப்.கேணல் அதிகாரி ஆயிரத்திற்கும் அதிகமான ரவைகளை விற்பனை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை பாதாள உலக தலைவன் ஹரக் கட்டாவை கொலை செய்வதற்கு, அவரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் பேருந்து மீது கிளைமோர் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட தகவலும் விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

இதற்காக இரண்டு கிளைமோர்களை, தருமாறு கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியிடம், கொமாண்டோ சலிந்த கேட்டிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad